Orr's Hill Arulmigu Kannaki Amman Temple

About the temple

Orr's Hill Arulmigu Kannaki Amman Temple

Temple history

Temple founded
1964
Sacred tree
Neem

அமைவிடம்

இந்து மாகடலில் இலங்கைத் தீவில் தென்கயிலை எனப் போற்றப்படும் திருகோணமலை நகரின் நுழைவாயிலில், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட உவர்மலை என்னும் நற்பதியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வருவதற்கு விசேட போக்குவரத்து எதுவும் தேவையில்லை.

கண்ணகி வழிபாட்டின் தொடக்கம்

கஜபாகு மன்னன் பத்தினித் தெய்வ வழிபாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்திய காலத்தில் கண்ணகி வழிபாடு மேலோங்கிக் காணப்பட்டது. இச்சூழலில் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்ணகி அம்மனுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தன.

பின்னர் போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பின்போது சகல ஆலயங்களும் அழிவுற்றன. திருகோணமலையிலிருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலம் போட்ட ஆறு என்னும் காட்டுப் பிரதேசத்தில் கண்ணகி அம்மனை வைத்து வணங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது; அவ் வழிபாடு இன்றுவரை நடைபெற்று வருகிறது. அழிவுற்ற ஏனைய ஆலயங்களுக்குப் பிற்காலத்தில் கட்டிடம் அமைக்கப்பட்ட போதிலும், கண்ணகி அம்மனுக்கு அக்காலத்தில் ஆலயம் அமைக்கப்படவில்லை.

1964 — ஆலயத்தின் தோற்றம்

1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் சேதத்தின் பின்னர், சைவப் பெருமகனார் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களால் இவ் உவர்மலைப் பகுதியில் தற்காலிகமாக ஆலயம் அமைக்கப்பட்டு, அப்பகுதிக்குக் கண்ணகிபுரம் எனப் பெயரிடப்பட்டு, பூசை வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பின்னர் இக் கிராமத்து மக்களின் அனுசரணையுடன், வேப்பஞ்சோலை மத்தியில் ஐந்து மண்டபங்களுடன், மூல மூர்த்தியாகிய கண்ணகி அம்மனுடன் பரிவார மூர்த்திகள் கூடிய அழகிய ஆலயம் அமையப் பெற்றுள்ளது.

தல விருட்சம் — வேம்பு

இவ் ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு ஆகும். இயற்கையில் இறைவனைக் காணலாம் என்ற வேதகால வாக்கிற்கமைய, இயற்கை அன்னை தந்த வேம்பு விருட்சங்களின் மத்தியில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.

காவல் தெய்வம் வைரவர் சந்நிதானத்தின் புறத்தே, வேப்ப மரத்தின் வேர் திரிசூல வடிவில் வளர்ச்சி அடைந்துள்ளமை அற்புதக் காட்சியாகும். அடியார்கள் அவ் விருட்சத்திற்குக் கற்பூரம் கொழுத்தி வழிபட்டு வைரவரின் அருளைப் பெறுகின்றனர். இதற்கு விசேட பூசைகள் தினமும் நடைபெறுகின்றன.

The temple's sacred neem tree, with the deity's face garlanded at its trunk
The sthala virutcham, the neem, with lamps lit at its foot

நாக தேவி

சர்ப்ப தோஷத்திற்குப் பரிகாரம் தேடும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம், சுமார் மூன்று அடி உயரம் வரை புற்று வளர்ந்து, அதனுள் குடிகொண்டு தோஷம் நீக்கும் நாக தேவியாக அம்பாள் காணப்படுகிறாள். அடியார்கள் ஞாயிறுதோறும் புற்றிற்குப் பால் வார்த்துப் பொங்கல் இட்டு வழிபட்டுத் தங்கள் நாக தோஷத்தினைப் போக்கி வருகின்றனர்.

ஆலயக் கட்டிட அமைப்பு

கோவில் கட்டிட அமைப்பு மடாலய வடிவமாகும். மூலஸ்தானம், இரண்டாம் மண்டபம், எழுந்தருளி மண்டபம், அடியார்கள் இறைவனைத் தரிசிக்கும் மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மணிக் கோபுரமும் உள்ளது.

ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்குச் சகல வசதிகளுடன் கூடிய வதிவிட இல்லம் வழங்கப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் திருமண மண்டபம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வாகனங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு வாகனசாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Kumbabishekams

  1. Nuthana Prathishta Kumbabishekam
  2. Pancha Kunda Punaravarthana Prathishta Kumbabishekam
  3. Punaravarthana Pancha Kunda Prathishta Kumbabishekam

Shrines

  • Kannaki Amman (principal deity)
  • Pillaiyar
  • Sivan
  • Nagathambiran
  • Subramaniyar with Valli and Deivanai
  • Vairavar
  • Veerabathirar
  • Veera Makali
  • The Navagrahas
  • The sacred neem tree

Committee

  • President

    V. Murugananthan

  • Secretary

    S. Shivakumar

  • Treasurer

    R. Shanmugathasan

Society registration no.: 11A5FM6