Orr's Hill Arulmigu Kannaki Amman Temple

கண்ணகி அம்மன்

உவர்மலை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயம்

3ஆம் ஒழுங்கை, கண்ணகிபுரம், உவர்மலை, திருகோணமலை

ஆலய வரலாறு

1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் சேதத்தின் பின்னர், சைவப் பெருமகனார் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களால் உவர்மலைப் பகுதியில் ஆலயம் அமைக்கப்பட்டு, அப்பகுதிக்குக் கண்ணகிபுரம் எனப் பெயரிடப்பட்டது. இன்று வேப்பஞ்சோலை மத்தியில் ஐந்து மண்டபங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய வரலாறு முழுவதையும் வாசிக்க

பூஜை நேரங்கள்

  • காலை

    ஆலயம் திறப்பு காலை 6.30, பூஜை 7.00, பூட்டப்படும் 8.30

  • மாலை

    ஆலயம் திறப்பு மாலை 5.00, பூஜை 5.30, பூட்டப்படும் 7.00

  • வெள்ளிக்கிழமை

    மதியம் 11.00 மணிக்கு பூஜை

விசேட தினங்களில் பூஜை நேரங்கள் மாற்றியமைக்கப்படும்

விசேட திருவிழாக்கள்

  • சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் அம்பாள்; சந்தனம் சாற்றப்பட்ட திருமேனிக்கு முன்னால் தீபம் ஏந்தப்படுகிறது.

    வைகாசித் திருவிழா

    வைகாசி மாதம், பூர்வ பக்ஷம் — எட்டு நாட்கள்

    வைகாசி மாதப் பூர்வ பக்ஷத்தில் கும்பம் வைத்து ஏழு தினங்கள் அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும். ஒவ்வொரு நாளும் பகலில் அம்பாளுக்கு அபிஷேகமும் பூசையும், மாலையில் விசேட பூசையும் நடந்து அம்பாள் எழுந்தருளி வெளி வீதி உலா வந்து அருட்காட்சி தருவாள். எட்டாம் நாளாகிய பூரணை தினத்தன்று குளிர்த்தி ஆடலுடன் திருவிழா நிறைவுறும்.

  • சங்காபிஷேகத்தின்போது மாலைகள் சூட்டப்பட்ட திருமேனிமீது சங்குகளிலிருந்து நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    சங்காபிஷேகம்

    தைப்பூசத் திருநாள் (தை மாதம்)

    ஆண்டுதோறும் வரும் தைப்பூசத் திருநாளில் 1008 சங்குகளில் அபிஷேகம் இடம்பெறும். மணவாளக்கோல சங்காபிஷேக தினத்தின் மறுநாள் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி உவர்மலைக் கிராமத்தின் ஊடாக நகர்வலம் வந்து அடியார்களுக்கு அருட்காட்சி கொடுப்பாள்.

  • செவ்வாடை கட்டப்பட்ட முருகப்பெருமானின் பொன் வேல்.

    கந்த சஷ்டி

    கந்த சஷ்டி விரத காலம்

    கந்த சஷ்டி விரத காலங்களில் முத்துக்குமாரசுவாமி வெளி வீதி உலா வருதல் இடம்பெறும். விரதத்தின் நிறைவில் சூரசங்காரம் நடைபெறும்.

  • மாதாந்தப் பௌர்ணமித் திருவிழா

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில்

    மாதந்தோறும் பௌர்ணமித் திருவிழா இடம்பெறுகிறது. அலங்கார பூசைகளுடன் அம்பாள் எழுந்தருளி உள் வீதி வலம் வருவாள்.

ஆண்டு முழுவதும் நடைபெறும் விரதங்களும் வைபவங்களும்

  • வரலக்ஷ்மி பூசை
  • ஆடிப் பூரம்
  • நவராத்திரி
  • ஆவணிச் சதுர்த்தி
  • பிள்ளையார் பெருங்கதை
  • கேதார கௌரி அம்மன் காப்பு
  • மாதாந்த வளர்பிறைச் சதுர்த்தி
  • மாசி மகம்
  • மகா சிவராத்திரி
  • பங்குனி உத்திரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • சித்ரா பௌர்ணமி
  • திருவெம்பாவை